தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரை நீதிக்கான தமிழ்ச் சிற்றூர்தி சந்திப்பு !

Unbenannt1நீதிக்கான தமிழ்ச் சிற்றூர்திப் பயணம் நேற்று யேர்மன் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்தனர் .

ஐநா நோக்கி நீதி தேடி செல்லும் தமிழ்ச் சிற்றூர்தி நேற்று Osnabrück நகரில் சோசலிச கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரை சந்தித்து ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் இன அழிப்பு தொடர்பாக உரையாடினார். அத்துடன் இவ்விடையம் சார்ந்த ஆவணங்களையும் கையளித்தனர் .

குறிப்பாக ஈழத்தமிழர்களுக்கு நடந்தது அல்லது நடந்துகொண்டிருக்கின்றது இன அழிப்பு என்று நிரூபித்த மக்கள் தீர்பாயத்தின் தீர்ப்பும் வழங்கப்பட்டது. தொடர்ந்து நகர மத்தியில் கண்காட்சி வைக்கப்பட்டு, துண்டுப்பிரசுரம் வழங்கி , ஒலி வடிவத்திலும் தகவல்கள் பல்லின மக்களுக்கு சென்றடைய செய்யப்பட்டது.

மாலை நேரம் Bielefeld நகரில் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது . இச் சந்திப்பில் மக்கள் எதிர்வரும் 10ம் திகதி நடைபெறவிருக்கும் மாபெரும் பேரணியில் கலந்துகொள்ளும் உணர்வுடன் கலந்துகொண்டனர்.

Comments
Loading...