தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு யாழ் பல்கலையில் மரங்கள் தறிப்பு! 

01

ஜூன் ஐந்தாம் திகதி, நாளை உலக சுற்றுச் சூழல் தினமாகும். நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் சுற்றுச் சூழலை சுத்தப்படுத்தல் மற்றும் சூழலைப் பாதுகாக்க மரங்களை நடுதல் முதலிய செயற்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றது. யாழ்ப்பாணத்திலும் இத்தகைய நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

03

இந்த நிலையில் உலக சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு யாழ்பல்கலைக்கழக சூழலில் உள்ள பயன்தரு மற்றும் பாரம்பரிய மரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மரங்களை நாட்டி, இயற்கையை பாதுகாக்கவேண்டியெ நிலையில் இவ்வாறு மரங்களை அழிப்பது சூழலை பாதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலக சுற்று சூழல் வாரம் கொண்டாடப்படும் வாரத்தில் பல்கலைக்கழகம் ஒன்று இயற்கையை பாதுகாக்கும் முன்னுதாரணம் மிக்க செயற்பாடுகளில் ஈடுபடவேண்டும் என்றும் இவ்வாறு மரங்களை தறிப்பது தவறான எடுத்துக்காட்டாகும் என்றும் பல்கலைக்கழக சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.

பலா, தென்னை, வில்வ மரம் முதலிய இவ்வாறு தறிக்கப்பட்டுள்ளன. இதேவேளை மரங்களை தறிக்கும்போது பல்கலைக்கழக சமூகத்தை சேர்ந்த பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது, ஆலய கட்டிடங்களை விஸ்தரிக்கவே இவ்வாறு மரங்கள் தறிக்கப்படுகின்றன என்றும் காரணம் கூறப்பட்டுள்ளது.

ஆலயத்தின் தர்மகர்த்தாவான முன்னாள் பேராசிரியரும் இலங்கை தமிழரசுக் கட்சியின் உப தலைவருமான சி.க. சிற்றம்பலமே இவ்வாறு மரங்களை தறிக்க உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Comments
Loading...