தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக டூர் ஃபைனல்ஸ் – வாய்ப்புப் பெற்றார் ரயோனிக்

பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரரை வீழ்த்தி, அரையிறுதிக்கு முன்னேறினார் கனடாவின் மிலோஸ் ரயோனிக். இதன் மூலம், உலக டூர் ஃபைனல்ஸ் தொடரில் பங்கேற்பதற்கான போட்டியில் ரயோனிக் நீடிக்கிறார்.roger-federer-babies

பிரிட்டன் தலைநகர் லண்டனில் நவம்பர் 6-ம் தேதி உலக டூர் ஃபைனல்ஸ் போட்டி நடைபெறவுள்ளது. இதில் தரவரிசையில் முதல் 8 இடங்களில் இருப்பவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தரவரிசையில் முன்னணியில் உள்ள செர்பியாவின் ஜோகோவிச், சுவிட்சர்லாந்தின் ஃபெடரர், ஸ்டான் வாவ்ரிங்கா, குரோஷியாவின் மரின் சிலிச், பிரிட்டனின் ஆண்டி முர்ரே, செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகிய ஆறு பேர், உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்கு தகுதி பெற்று விட்டனர்.

மீதமுள்ள 2 இடங்களுக்கு ஜப்பானின் நிஷிகோரி, ஸ்பெயினின் டேவிட் ஃபெரர், கனடாவின் மிலோஸ் ரயோனிக் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவுகிறது.

உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்கு முன்னதாக பிரான்ஸில் பாரிஸ் மாஸ்டர்ஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் காலிறுதியில் வேகமாக “சர்வ்’ செய்வதில் வல்லவரான மிலோஸ் ரயோனிக், 7-6 (4), 7-5 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன் மூலம் அரையிறுதிக்கு முன்னேறியதோடு, உலக டூர் ஃபைனல்ஸ் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பையும் தக்க வைத்துக் கொண்டார்.

மற்றொரு காலிறுதியில் ஜோகோவிச், ஆண்டி முர்ரேவைத் தோற்கடித்தார். நிஷிகோரி, டேவிட் ஃபெரரை வீழ்த்தினார். அரையிறுதியில் ஜோகோவிச், நிஷிகோரியை எதிர்கொள்கிறார். ரயோனிக், தாமஸ் பெர்டிச்சைச் சந்திக்கிறார்.

Comments
Loading...