தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

அசத்துவாரா அணித்தலைனர் கோஹ்லி

இந்தியா-இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கட்டாக்கில் இன்று நடக்கவிருக்கிறது

புதிய ஊதிய ஒப்பந்த பிரச்சினையால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி அண்மையில் இந்திய பயணத்தை தடாலடியாக பாதியில் ரத்து செய்து விட்டு நாடு திரும்பியது. இதனால் ஏற்பட்ட இழப்பை ஈடுகட்டுவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் உடனடியாக இலங்கை அணிக்கு அழைப்பு விடுத்தது. இந்தியாவின் அழைப்பை இலங்கை கிரிக்கெட் வாரியமும் ஏற்றுக் கொண்டது.kohli_jadeja

இதன்படி தற்போது இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இந்தியா-இலங்கை மோதும் முதலாவது ஒரு நாள் போட்டி ஒடிசா மாநிலம் கட்டாக்கில் இன்று 02/11/2014 (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

முதல் மூன்று ஆட்டங்களுக்கு கேப்டன் டோனிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால் இந்திய அணியை விராட் கோலி வழிநடத்துகிறார். கோலிக்கு ஏற்கனவே 12 ஆட்டங்களுக்கு கேப்டனாக (9 வெற்றி, 3 தோல்வி) செயல்பட்ட அனுபவம் உண்டு. பதற்றமின்றி இளம் வீரர்களை அவர் திறம்பட கையாண்டால், தொடரை மங்களகரமாக தொடங்கலாம்.

டோனி மட்டுமின்றி, பயிற்சி ஆட்டத்தில் கலக்கிய ரோகித் ஷர்மாவும் இல்லாததால் பேட்டிங்கில் சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ஷிகர் தவான் ஆகியோரைத் தான் அணி நிர்வாகம் மலை போல் நம்பி இருக்கிறது. இவர்கள் ஜொலித்தால் தான் சவாலான ஸ்கோரை எட்ட முடியும். இதில் சுரேஷ் ரெய்னாவுக்கு இது 200-வது ஒரு நாள் போட்டி என்பது கூடுதல் சிறப்பாகும். இன்னும் 44 ரன்கள் எடுத்தால், ஒரு நாள் போட்டியில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 11-வது இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெறுவார்.

Comments
Loading...