தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக நாடுகளில் இன்றும் தொடரும் இனப்படுகொலைகளுக்கு வித்திட்டது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே – விஸ்வநாதன் ருத்திரகுமாரன்..

உலக நாடுகளில் இன்றும் தொடரும் இனப்படுகொலைகளுக்கு 21 ஆம் நூற்றாண்டின்மிகக் கொடூரமான முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே வித்திட்டதாக   நாடு கடந்ததமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விஸ்வநாதன் ருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

ஐ . நாவின்  73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டுசிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன உரையாற்றவுள்ளார்.,

இந்நிலையில் ஐ. நாசபையின் தலைமையகத்திற்கு எதிரில் திரண்டு ஆர்ப்பாடடம் நடத்திவரும் புலம்பெயர்தமிழர்களுடன் இணைந்துகொண்ட நிலையிலேயே விஸ்வநாதன் ருத்திரகுமாரன் இதனை கூறியுள்ளார்.

இலங்கை தொடர்பில் மௌனமாக இருந்துவரும் சர்வதேசசமூகத்தை மீள ஒருங்கிணைக்கும் நோக்கிலேயே தாம் போராட்டத்தில் இணைந்து கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“ஒன்பது வருடங்களுக்கு முன்னர் ஒரு இலட்சம் தமிழர்கள் படுகொலைசெய்யப்பட்டனர். எமது மக்கள் நடந்துசெல்லும் போதும், சாப்பிடும் போதும்,உறங்கும் போதும் படுகொலை செய்யப்பட்டனர்.

முள்ளிவாய்க்கால் படுகொலைஎன்பதே 21 ஆவது நூற்றாண்டின் மிகக் கொடூரமான இனப்படுகொலையாகும்” என்றும் ருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்  முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையே மியன்மார், சிரியாபோன்ற நாடுகளில் தொடரும் இனப்படுகொலைகளுக்கும் வழியேற்படுத்தி  கொடுத்ததாகவும் அவர்  இதன்போது தெரிவித்துள்ளார்.

அதோடு நீதியை வழங்காது தொடர்ந்தும் இழுத்தடித்து வரும் இலங்கை  அரசாங்கத்தை சர்வதேச போர்குற்ற நீதிமன்றில் பாரப்படுத்த சர்வதேச சமூகம்நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ருத்திரகுமாரன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...