தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

உலக ஹாக்கி லீக் தொடரில் நெதர்லாந்து அணியிடம் தோற்றது இந்திய அணி

netherlandsராய்ப்பூரில் நடைபெற்று வரும் உலக ஹாக்கி லீக் தொடரில் நெதர்லாந்து அணியுடனான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்தது.

 பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, கடைசி லீக் ஆட்டத்தில் வலிமை வாய்ந்த நெதர்லாந்து அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நெதர்லாந்து அணி, மூன்றுக்கு ஒன்று என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றது.

  36-ஆவது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி நெதர்லாந்து அணியின் VAN DER WEERDEN முதல் கோல் அடித்தார். இதன்பின்னர் 43-ஆவது, மற்றும் 54-ஆவது நிமிடங்களில் நெதர்லாந்து அணி கோல் அடித்தது. இந்திய அணிக்காக 47-ஆவது நிமிடத்தில் சிங்கலேனா சிங் கோல் அடித்தார்.

 இதையடுத்து இந்திய அணி ஒரு புள்ளியுடன் பி பிரிவில் கடைசி இடம் பிடித்தது. ஏ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் காலிறுதியில் இந்திய அணி விளையாடவுள்ளது.

Comments
Loading...