Designed by Iniyas LTD
ஊதிய முறைகேடு தொடர்பில் பெண் அலுவலர் பணி நீக்கம்!
வேடசந்தூரில் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலராக பணிபுரிந்தவர் விஜயா. இவர் சமீபத்தில் நிலக்கோட்டை கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலராக பணிமாறுதல் செய்யப்பட்டார்.
வேடசந்தூரில் ஊழியர்களிடம் ஊதிய முறைகேட்டில் கூடுதல் தொடக்கக்கல்வி அலுவலர் ஜான்சன் ஈடுபட்டதால் ஏற்கனவே சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகள் தொடர்ந்து விஜயாவை விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று விஜயாவை சஸ்பெண்டு செய்து பள்ளி கல்வித்துறை இயக்குனரக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.