Designed by Iniyas LTD
வெள்ளக்கோவிலில் தனியார் பள்ளியில் ரூ.22 லட்சம் மாயம்
வெள்ளக்கோவிலில் பாலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-2 வரை உள்ளது. இங்கு சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியின் தாளாளராக இருந்து வருபவர் ராஜா (வயது 50).
பள்ளியின் 2-ம் பருவ தேர்வு கட்டணம் மாணவர்களிடம் வசூலிக்கப்பட்டது. இதில் ரூ.22 லட்சம் வசூலானது.
இதனால் இந்த பணத்தை கடந்த 28-ந் தேதி , அலுவலக உதவியாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் தாளாளர் ராஜா கொடுத்து, பீரோவில் வைக்கும்படி கூறினார். இதைதொடர்ந்து கிருஷ்ணமூர்த்தியும் ரூ.22 லட்சம் பணத்தை பீரோவில் வைத்து விட்டு சென்று விட்டார்.
இந்த நிலையில் கடந்த 30-ந் தேதி இரவு பள்ளி தாளாளர் ராஜா , பீரோவில் இருந்த பணத்தை எடுக்க வந்தார். அப்போது பீரோவில் பணம் இல்லாததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதைதொடர்ந்து தாளாளர் ராஜா, வெள்ளக்கோவில் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வந்து ரேகைகளை பதிவு செய்து வருகிறார்கள்.
தனியார் பள்ளியில் ரூ.22 லட்சம் மாயமான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.