Designed by Iniyas LTD
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நடைபெற்றது
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்புகள் நடைபெற்றது கொண்டிருந்த மெதகம பிரதேச செயலகத்திற்கு சென்ற அமைச்சர் விஜிதமுனி சொய்சா அதிகாரி ஒருவரை அச்சுறுத்தியுள்ளார்.
மாகாண சபைத் தேர்தலில் வாக்கு பதிவு நடைபெறும் வாக்களிப்பு நிலையத்திற்கு கட்சி ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர் ஒருவர் இவ்வாறு சென்றது பாரதூரமான விடயம் எனவும் இது தேர்தல் சட்டங்களை மீறும் செயல் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எனினும் வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக இருந்த அதிகாரிகள் எவரும் அமைச்சரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பை வெளியிடவில்லை.எனினும் அமைச்சர் பிரதேச செயலகத்தில் இருந்த சமுர்த்தி அதிகாரி ஒருவரை அச்சுறுத்தி விட்டு அங்கிருந்து வெளியேறியுள்ளதாக கூறப்படுகிறது