Designed by Iniyas LTD
எங்கள் நாட்டில் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் உள்ளனர் – பாக். இராணுவம்
எங்கள் நாட்டில் தான் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினர் உள்ளதாகவும், அவர்களை தாங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் பாகிஸ்தான் இராணுவம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானில், இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பினர் உள்ளதை முதல் முறையாக அந்நாட்டு ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால் அவர்களை கட்டுக்குள் வைத்திருப்பதாக தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக பாகிஸ்தான் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அசிம் பஜ்வா கூறியதாவது, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்த 300 க்கும் மேற்பட்டோரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், ஐ.எஸ் அமைப்பின் உயர் மட்ட அதிகாரி ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்கள் தாக்குதல்கள் சிலவற்றை முறியடித்துள்ளதாகவும், குறிப்பாக இஸ்லாமபாத்தில் உள்ள விமானநிலையம் மற்றும் தூதரகங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த அவர்களின் முயற்சிகளை பாகிஸ்தான் இராணுவம் முறியடித்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் கடந்த மாதம் குவெட்டா பகுதியில் உள்ள மருத்துவமனையில் நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பினர் பொறுப்பில்லை என்று தெரிவித்ததாக கூறப்படுகிறது.