தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

பாக்கிஸ்தான் கிறிஸ்தவ காலனியில் தற்கொலைத் தாக்குதல்

பாகிஸ்தானின் பெஷாவர் அருகில் உள்ள கிறிஸ்தவ காலனி பகுதியில் இன்று தற்கொலைப்படை தீவிரவாதிகள் புகுந்து திடீர் தாக்குதல் நடத்தினர். இதுபற்றி தகவல் அறிந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதியை சுற்றி வளைத்து பதில் தாக்குதல் நடத்தினர். இதில், 4 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.killed-attack

5 பேர் காயமடைந்தனர்.  இத்தகவலை ராணுவ செய்தித் தொடர்பாளர் ஆசிம் பஜ்வா உறுதி செய்துள்ளார். காலை 6 மணிக்கு நடந்த இந்த தாக்குதலைத் தொடர்ந்து அப்பகுதியில் கூடுதல் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். வேறு தீவிரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என்று சந்தேகிப்பதால் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.   இந்த காலனி பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லை மற்றும் வர்சக் அணைக்கட்டின் அருகில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...