தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எட்டு போதைப்பொருள் கப்பல்களை பிடிக்கும் முயற்சியில் ஸ்ரீ போலீஸ்!

heroin-ship-020416-seithy-1போதைப்பொருள் அடங்கிய 8 கப்பல்களை சுற்றிவளைக்கும் செயற்பாடொன்றை இலங்கை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆரம்பித்துள்ளது.

தெற்காசியாவில் கைப்பற்றப்பட்ட அதிக பெறுமதியான போதைப்பொருளை கண்டுபிடித்த இலங்கை பொலிஸ் போதை தடுப்பு பிரிவினரே இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள பாரிய புலனாய்வு தகவல் வலையமைப்பின் ஊடாக கிடைக்கும் தகவல்களுக்கமைய தேடுதல் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.

இதற்கமைய கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை ஊடாக இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்ட 1200 கோடி ரூபா பெறுமதியான கொக்கேன் தொகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த போதைப்பொருள் கொண்டு செல்லப்பட்ட கப்பல் ஈக்வாட்டர் மற்றும் சவுதி அரேபியாவில் இருந்து புறப்பட்ட சந்தர்ப்பத்தில் 600 கொள்கலன்கள் காணப்பட்டுள்ளன. அதில் கொக்கேனுடனான கொள்கலன் தொடர்பிலான தகவல்களை புலனாய்வு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்.

போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி என வேலைத்திட்டத்தின் கீழ் அரசாங்கம் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் கீழ் பொலிஸ் திணைக்களத்தின் மற்றைய பாதுகாப்பு பிரிவுகளின் ஆதரவிற்கமைய இந்த விசேட புலனாய்வு பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது.

அந்த புலனாய்வு பிரவு இலங்கையில் மாத்திரமின்றி சர்வதேச போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளதன் முடிவாக இந்த கொக்கேன் தொகையை கண்டுபிடித்துள்ளது.

போதைப்பொருள் தடுப்பு பிரிவு 2013ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் 1356 கிலோ கொக்னே் தொலையை கண்டுபிடித்துள்ள நிலையில் அதின் பெறுமதி 20 பில்லியன் ரூபாவாகும்.

இந்த 800 கிலோ கொக்கேன் உடனான கப்பல் தொடர்பில் போதைப்பொருள் தரப்பு பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Comments
Loading...