Designed by Iniyas LTD
எதிரணி வரிசையில் அருந்திக பெர்னான்டோ
சிறிலங்கா அரசாங்கத்தில் சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சராக இருந்து அண்மையில் பதவி நீக்கப்பட்ட அருந்திக பெர்னான்டோ, நேற்று நாடாளுமன்றத்தில் எதிரணியில் அமர்ந்து கொண்டார்.
எதிரணியில் பக்கத்தில் அமர்ந்து கொண்ட பின்னர் உரையாற்றிய அவர் தாம் தற்போதைய அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்காக பணியாற்றப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.
அருந்திக பெர்னான்டோ எதிரணி வரிசையில் அமர்ந்து கொண்ட போது, கூட்டு எதிரணியினர் அவரை எழுந்து நின்று வரவேற்றனர்.
பின்னர் அவர் மகிந்த ராஜபக்சவின் ஆசனத்துக்குச் சென்று வாழ்த்துக்களைக் கூறிக் கொண்டார்.