Designed by Iniyas LTD
ரஞ்ஜன் ராமநாயக்க சட்டத்தைக் கையில் எடுத்துள்ளார்- நாமல் குற்றச்சாட்டு
நாட்டிலுள்ள பௌத்த பிக்குகளையும், நீதித் துறையையும் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க கண்மூடித்தனமாக விமர்சனம் செய்துவிட்டு, தன்னை முடியுமானால் சிறையில் போடுமாறும் சவால் விட்டுள்ளதானது, அரசாங்கத்தின் போக்கை தெளிவாக எடுத்துக் காட்டுவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
தற்பொழுதுள்ள அமைச்சர்கள் சட்டத்தைக் கையில் எடுத்துக் கொண்டு செயற்படுகின்றார்கள் என்பதற்கு இதுவே வெளிப்படையான ஆதாரமாகும்.
பின்னாசன எம்.பி.க்களை வைத்து நீதித்துறையை நிந்தனை செய்யும் போது நீதித்துறைக்குள்ள கௌரவமும், மகிமையும் இல்லாமல் போகின்றது. அதனையே அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது எனவும் அவர் கூறினார்.