தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எதிர்க்கட்சி பதவிக்காக உச்ச நீதிமன்றம் செல்ல திட்டமிடும் காங்கிரஸ்

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெற, காங்கிரஸ் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.இதன் காரணமாக  உச்ச நீதிமன்றம் செல்லவும்  காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.kankirass

மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 44 தொகுதிகளை வென்று 2ம் இடத்தைப் பிடித்துள்ள போதும், 10 சதவிகிதம் பெறவில்லை. பத்து சதவிகிதமான 54 எம்பிக்களாவது இருந்தால்தான் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைக்கும் என்பதால், காங்கிரசுக்கு எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்நிலையில் இதுக்குறித்து சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்திய மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் எந்தக் கட்சிக்கும் எதிர்க்கட்சி அந்தஸ்து இல்லை என்று தீர்மானித்து உள்ளதாகவும் தெரிய வருகிறது. இந்நிலையில்தான் மக்களவை எதிர்க்கட்சி அந்தஸ்து தங்களுக்கு இல்லை என்றால், உச்ச நீதிமன்றம் வரை செல்லவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Comments
Loading...