தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்கள் நாடு திருப்பம்

ஈராக்கில் தீவிரவாதிகளின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட 46 செவிலியர்களும் சற்று முன்னர் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்.அங்கு உறவினர்கள் அவர்களை ஆனந்த கண்ணீருடன் வரவேற்றனர்.nrs

ஈராக்கில் சிக்கித் தவித்த 46 செவிலியர்கள் உட்பட 183 இந்தியர்கள் தனி விமானம் மூலம் இன்று காலை மும்பை வந்தடைந்தனர். நாடு திரும்பிய செவிலியர்களில் 90 சதவிகிதம் பேர் கேரள மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதால், மும்பை வந்திறங்கிய இந்த செவிலியர்கள் அனைவரும் கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டனர்.

அங்கு இவர்களை அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள், உறவினர்கள் என்று அனைவரும் வரவேற்றனர். உறவினர்கள் கண்ணீர் மல்க கட்டியணைத்து பரவசமடைந்தனர்.இந்திய செவிலியர்கள் தீவிரவாதிகள் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டது என்பது, இந்திய வெளியுறவுத் துரையின் கடும் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என்றே கருதப்படுகிறது.

Comments
Loading...