Designed by Iniyas LTD
எதிர்வரும்-14 ஆம் திகதி நாடாளுமன்றம் கூடும் – ஜனாதிபதி…
நாடாளுமன்றத்தை எதிர்வரும்-14 ஆம் திகதி மீண்டும் கூடும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
எதிர்வரும்-14 ஆம் திகதி காலை-10 மணிக்கு நாடாளுமன்றம் கூடுமென அரசிதழ் அறிவிப்பு நேற்றிரவு வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த 26 ஆம் திகதி மகிந்த ராஜபக்சவைப் பிரதமராக நியமித்த ஜனாதிபதி நாடாளுமன்றத்தை ஒக்ரோபர் மாதம்-16 ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு அனைத்துலக சமூகம் , அரசியல் கட்சிகள்,சிவில் சமூகம் என்பன கடும் எதிர்ப்பை வெளியிட்டதோடு நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறும் வலியுறுத்தி வந்த நிலையில் , நாடாளுமன்றம் எதிர்வரும் 14 ஆம் திகதி கூடுமென அறிவிகபப்ட்டுளமை குறிப்பிடத்தக்கது.