Designed by Iniyas LTD
வடக்கில் கிழக்கில் தீவிரமடையும் கண்காணிப்பு – மக்கள் அச்சம்…
வடக்கில் கிழக்கில் தமிழ் வாழ் இடங்களில் புலனாய்வாளர்களின் காண்காணிப்புக்கள் தீவிரமடைந்து வருகின்றதாக தெரிவிகப்படுகின்றது.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் ஒருபுறம் இருந்தாலும்,மறுபுறத்தில் வடக்கு கிழக்கில் நிலைகொண்டுள்ள தமிழர்கள் மாவீரர் நாளுக்கான செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் இவற்றை கண்காணிக்கும் நடவடிக்கையில் புலனாய்வாளர்கள் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அறியகிடைக்கின்றது.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் கார்த்திகை மாதத்தில் எவர் எவர் மாவீரர்களை நினைவு கூர கூட்டம் கூடுகின்றார்கள் மாவீரர் பெற்றோர்களுக்கு ஏதும் உதவிகள் வழங்கு கின்றார்களா என்பது தொடர்பில் படையினரால் ஆராயப்பட்டுவருவதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் வவுனியா,மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களிலும் புலனாய்வாளர்கள் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தியுள்ளார்கள்.
மக்கள் சிறு கூட்டமாக இருந்தாலும் அதனையும் புலனாய்வாளர்கள் கண்காணிப்பதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை நாட்டின் ஆட்சி மாற்றம் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவகை அச்சத்தை உண்டுபண்ணி இருந்தாலும் , மாவீரர் நாளை நினைவிற்கொள்ள மக்கள் தயாராகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.