Designed by Iniyas LTD
எத்தியோப்பியாவுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகள் தாக்குதல்
தெற்கு சூடானைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய கும்பல், அண்டை நாடான எத்தியோப்பியாவுக்குள் ஊடுருவி நடத்திய பயங்கர தாக்குதலில், 140 பேர் இறந்தனர்.
ஆப்ரிக்க நாடான எதியோப்பியாவின் எல்லையை ஒட்டி, தெற்கு சூடான் நாடு உள்ளது. இங்கு வசிக்கும் முர்லி இனத்தைச் சேர்ந்த ஒரு கும்பல், எதியோப்பியாவின் எல்லைப்பகுதிக்குள் நுழைந்து, கால்நடைகளை கொள்ளையடித்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்நிலையில், எத்தியோப்பியாவின் எல்லை நகரமான கம்பெல்லாவுக்குள், நேற்று முன்தினம் இரவு, முர்லி பழங்குடியின கும்பல் பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தது.அவர்கள், கால்நடைகளை கொள்ளையடிக்க முயற்சித்தனர்.
தடுக்க வந்தவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில், 140க்கும் மேற்பட்டோர் இறந்துவிட்டதாக, எத்தியோப்பிய அரசு அறிவித்துள்ளது. பலரை கொன்று குவித்தும், அந்த கும்பலின் வெறி அடங்கவில்லை. பெண்கள், குழந்தைகள் உட்பட, 50க்கும் மேற்பட்டோரை கடத்திச் சென்றனர். இதையடுத்து, எத்தியோப்பிய ராணுவம், அந்த கும்பலை விரட்டி அடித்தது.தெற்கு சூடானில் நடக்கும் உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டு, மூன்று லட்சம் பேர், எத்தியோப்பியாவின் கம்பெல்லா நகரில், அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.