Designed by Iniyas LTD
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப்படமாட்டாது என்கின்றார் வாசுதேவ நாணயக்கார
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ஐக்கிய தேசியக் கட்சி தனித்து ஆட்சி அமைப்பதற்கு இடமளிக்கப் போவதில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
வார இறுதி ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் தலைமத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஐக்கிய தேசியக் கட்சி சிக்கியுள்ளதாகவும், இவ்வாறான ஓர் பின்னணியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தனித்து ஆட்சி அமைக்க சந்தர்ப்பம் வழங்குவது நகைப்பிற்குரியது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜாதிக ஹெல உறுமய உள்ளிட்ட சிறுகட்சிகளுடன் இணைந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு 102 ஆசனங்களே உண்டு என்றும், சுதந்திரக் கட்சியின் ஆதரவின்றி ஆட்சி அமைக்க வேண்டுமாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தே ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன் சுதந்திரக் கட்சியின் ஆதரவு இன்றி ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆட்சி அமைக்க முடியாது வாசுதேவ நாணயக்கார இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.