Designed by Iniyas LTD
தேசிய கட்சிகள் இரண்டுமே தமிழர்களுக்குத் தீர்வைப் பெற்றுத்தராது – ஜே.வி.பி.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றால் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தரமுடியாது என ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
யாழில் நேற்றையதினம் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சியுடனோ, சுதந்திர கட்சியுடனோ பயணித்து தமிழ் மக்களுக்கான தீர்வுகளை பெறமுடியாது என்றும்,
அண்மையில் ராஜபக்ஷவின் அரசியல் சூழ்ச்சியின் போது அதனைத் தோற்கடிக்க தாம் கூட்டமைப்போடு இணைந்து செயற்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஆனால் இன்று மஹிந்தவின் திருடர்களையும் அவர்களின் திருட்டு செயல்களையும் ரணிலும், மைத்திரியும் இணைந்து பாதுகாக்கின்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அதோடு தற்போதைய வரவு செலவு திட்டத்தில் வடக்கை அபிவிருத்தி செய்ய அரசாங்கம் எந்தவித நிதியையும் ஒதுக்கவில்லை” எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
