தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் இல்லை – வடமாகாண ஆளுநர்

எந்தவொரு தமிழ் அரசியல்வாதிகளிடமும் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் இல்லை என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவுவில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும்  வடக்கில் இருக்கின்ற அனைத்துத் தமிழ் அரசியல்வாதிகளுக்கும் பாதுகாப்பு வழங்குவது சிங்கள பொலிஸ் அதிகாரிகளே எனவும்,

நாடாளுமன்றத்திலும் சரி மாகாண சபையிலும் சரி அவர்களிற்கு பாதுகாப்பு வழங்குவது சிங்கள பொலிஸ் அதிகாரிகளே எனவும் அவர் கூறியுள்ளார்.

அதோடு  வடக்கில் வெவ்வேறு இடங்களில் இருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்ட போதிலும் மீண்டும் யுத்தம் ஏற்படுவதற்கு இடமளிப்பதில்லை எனவும் அவர் இதன்போது  மேலும் தெரிவித்துள்ளமை  குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...