தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

கிளிநொச்சியில் இராணுவத்தினரின் ரக் மோதியதில்ஒருவர் உயிரிழந்துள்ளார்..

கிளிநொச்சியில் இருந்து இரணைமடு  நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது,  இராணுவத்தினரின் ரக்  மோதியதில்நபர்  ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்றையதினம்  பிற்பகல் கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்த  விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்ற  கிளிநொச்சி பாரதிபுரம் பகுதியை சேர்ந்த 51 வயதான 5 பிள்ளைகளின் தந்தையே  உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை உயிரிழந்த. நபர் கிளிநொச்சி விவசாய திணக்களத்தில் கடமையாற்றும் குகனேஸ்வரநாதன் (நாதன்)  என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...