Designed by Iniyas LTD
என் தேசக்காதலுடன்…!
தாய்க்கும் தமிழுக்குமான
அவன் காதல்…
தாய் நாட்டுக்கும்
எனக்குமான காதலுடன்
சந்தித்த கணப்பொழுதில்
என் நினைவில் அவன்…
விண்மீன்கள் ஔியில்
அவன் முகம், அழகோ அழகு.!
மின்னி மின்னி மறையும்
மின்மினி பூச்சிகள் ஔியில்
அவன் கம்பீரத்தை
தினமும் இரசிப்பேன்.
சில்வண்டு இசையில்
அவன் குரலிசையை
நானும் தினம் கேட்டேன்…
வட்ட நிலா போல் நானும்,
அவன் அழகை தூர
நின்று இரசித்தேன்
ஏனோ தொியவில்லை..?
அவனும், நானும்
சந்தித்த தருணம்
எனக்கானவனாக அவனில்லை.!!
நானும் என் காதலும்
ஆனாதையாக
காத்திருப்பில் கனவுகள்
கலைந்தது தினம்
கண்ணீா்ப் பாிசாக
என் இமைகள்
மூட மறுக்கிறது.!!
என் விழிகளுக்கு ஔியூட்ட
அவன் வருவான் என்ற
ஏகந்த மனதுடன்….!
கற்பனையில் நானும்
ஏங்கி நிற்கையில்
என் காலங்கள் யாவும்
விடையில்லா கேள்விகளாகின.!!
அன்றொரு நாள்
அனைத்துமே உடைந்தது!!!
மிஞ்சியது எனக்கு ஏமாற்றங்கள்…
உடைந்தது என் சிறு இதயம்.!
அவன் நினைவுகள்
மட்டும் இறுதியில் என்னிடம்
இருந்தும் என்னவன்
வீரமறவன்…!
என்ற பெருமையுடன்
பயணிக்கிறேன்
காலம் உள்ள
நாள் வரையில்
என் தேசக்காதலுடன்…!
க.பொம்மை