Designed by Iniyas LTD
பிலிப்பைன்ஸில் குண்டுவெடிப்பு – 19பேர் பலி…
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள தேவாலயம் ஒன்றில் குண்டுவெடித்ததில் 19பேர் உயிரிழந்துள்ளதோடு 48பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிலிப்பைன்ஸ் நாட்டின் தென்பகுதியில் உள்ள ஜோலோ தீவில் ரோமன் கத்தோலிக்கத் தேவாலயத்தில் இன்று வழிபாட்டுக்காக நூற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர்.
அப்போது அங்குப் பலத்த சத்தத்துடன் 2 குண்டுகள் அடுத்தடுத்து வெடித்ததாகவும், அதில் குண்டுவெடிப்பில் 19பேர் உயிரிழந்ததாகவும், 48பேர் காயமடைந்துள்லதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
உயிரிழந்தவர்களில் 5பேர் பிலிப்பைன்ஸ் படைவீரர்கள் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்த குண்டுவெடிப்பை அபு சாயப் என்கிற தீவிரவாத அமைப்பு நிகழ்த்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.