தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எம்ஜிஆர் சிலைக்கு தீ வைப்பு

கள்ளக்குறிச்சி அருகே எம்ஜிஆர் சிலைக்கு தீ வைத்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.   சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டம் புக்கிரவாரி கிராமத்திலுள்ள எம்ஜிஆர் சிலை தேர்தல் ஆணைய விதிகளின் படி, துணியைக் கொண்டு மறைக்கப்பட்டுள்ளது.mgr_1

இந்த நிலையில் மர்மநபர்கள் சிலர் துணியால் மூடப்பட்ட எம்ஜிஆர் சிலைக்கு தீ வைத்துள்ளனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த கள்ளக்குறிச்சி போலீசார், சிலைக்கு தீ வைத்து சென்ற மர்மநபர்கள் யார் என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments
Loading...