Designed by Iniyas LTD
எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும் – சம்மந்தன்
எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கின்ற, எம்மை நாமே ஆளுகின்ற அதிகாரங்கள் வேண்டும். அதனைத் தான் நாம் கோருகின்றோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். திருகோணமலை தமிழர் அபிவிருத்தி ஒன்றியத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட திருகோணமலை மாவட்டத்தின் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆயர் அதிவணக்கத்திற்குரிய நோயல் இம்மானுவலை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று சர்வோதய ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெற்றது. இந்தநிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், மக்கள் தமது அனுபவம் மற்றும் அறிவின் அடிப்படையில் தாமக்காக வேலை செய்யக்கூடிய பிரதிநிதியினை தெரிவு செய்ய வேண்டும். மக்களது பிரச்சினைகளை தீர்ப்பதாக இருந்தால் அவற்றை நிறைவேற்றக்கூடிய அதிகாரம் அவர்களிடம் இருக்கவேண்டும். அதைத்தான் நாங்கள் கேட்கின்றோம். இந்த சந்தர்ப்பத்தை நாங்கள் முழுமையாக பயன்படுத்தவேண்டும். எனவும் தெரிவித்தார்.