தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேர்தலுக்காக பணத்தை அள்ளி வீசும் கூட்டமைப்பு தலைகள்

தேர்தல் பிரச்சாரங்கள் இன்னும் இரு வாரங்களில் சூடு பிடிக்கவுள்ள நிலையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் முன்னாள் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும் வடமராட்சி வேட்பாளரும் மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தை பிரதிநிதிபடுத்துபவரும் இரணைமடு குள நீரை வைத்து அரசியல் செய்துவருபவரும் பணத்தை அள்ளிவீச தொடங்கியுள்ளனர். அவர்கள் இருவரும் தத்தமது தேர்தல் பிரச்சாரத்திற்காக யாழ்ப்பாண நாளிதழ்களில் பத்திரிகையின் முன்பக்க விளம்பரத்திற்காகத் தலா பதினைந்து இலட்சம் ரூபாய் முற்பணம் வழங்கியுள்ளதாக அறியமுடிகின்றது.tna

அதுவும் சாதாரண பாடசாலை ஆசிரியர் ஒருவர் இவ்வாறு பணத்தை அள்ளிக்கொட்டுவதற்கு எவ்வாறு பணம் வந்ததென கேள்வி எழுப்பப்படுகின்றது. புலம்பெயர் உறவுகளது பணத்தை சுருட்டி இவ்வாறு இடாம்பீகமாவெனவும் கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

தேசியப்பட்டியல்காரரிற்கு அரசு ஜந்து சொகுசு வாகனங்கள் மற்றும் பெருமளவு பணத்தை அள்ளி வழங்கியுள்ளது. அவ்வாகனங்களில் ஒன்றினை பிரச்சாரத்திற்காக விநாயகமூர்த்திக்காக அள்ளி வழங்கியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...