Designed by Iniyas LTD
எம் உறவுகள் எங்கே?? மட்டக்களப்பில் திரண்ட மக்கள்…
வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகள் தொடர்பில் சரியான பதிலை அரசாங்கம் வழங்குவதற்கு சர்வதேசம் அழுத்தங்களை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் கடையடைப்பும் கவனயீர்ப்பு பேரணியும் போராட்டமும் இன்று காலை முன்னெடுக்கபப்ட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் குடும்பசங்கத்தின் ஏற்பாட்டில் இந்த பேரணி நடாத்தப்பட்டது.
இந்த கவன ஈர்ப்பு பேரணியில் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வீ.விக்னேஸ்வரன், இலங்கை தமிழரசுக் கட்சி செயலாளருமான துரைராஜசிங்கம்,
மட்டக்களப்பு தமிழ் இளைஞர்கள் சமூக அமைப்பு மற்றும்இலங்கை தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னணி ஏனைய அமைப்புகளும் இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
அதோடு வடகிழக்கில் உள்ள சகல பிரதேசங்களிலும் இருந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,மற்றும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து பல ஆயிரக்கணக்கான மக்கள்,இளைஞர்கள் பல்வேறு கோரிக்கைகளை தாங்கிய பதாதைகளை ஏந்திய பேரணி காந்தி பூங்கா வரையில் சென்றது.
காந்தி பூங்காவினை பேரணி சென்றடைந்ததும் அங்கு கவன ஈர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.





