Designed by Iniyas LTD
முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்ட மிகப் பெரிய எரிவாயுக் குழி…
துர்க்மெனிஸ்தான் நாட்டில் உள்ள மிகப் பெரிய எரிவாயுக் குழி முதன் முதலாக ஆளில்லா விமானம் மூலம் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
காரகும் பாலைவனத்தில் ((Karakum Desert)) காணப்படும் இந்த நெருப்புக்குழி இயற்கையாக உருவானது.
இது சுமார் 70 மீட்டர் சுற்றளவும், 30 மீட்டர் ஆழமும் கொண்டது. இதன் வெப்பநிலை சுமார் ஆயிரம் டிகிரி செல்சியஸ் என்று கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே இந்தக் குழிக்கு நரகத்தின் கதவு என்று பெயரிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த நெருப்புக் குழியின் முழுஅளவையும் பார்க்க விரும்பிய விஞ்ஞானிகள் ட்ரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் அதனைப் படம் பிடித்துள்ளனர். ஆங்காங்கே பற்றி எரியும் பாறைகளும், கொளுந்து விட்டெரியும் நெருப்பும் என அனைத்தையும் ட்ரோன் படம் பிடித்துள்ளது.
