Designed by Iniyas LTD
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நூற்றாண்டையொட்டி சிறப்பு தபால் தலை -ஐ.நா. வெளியீடு
மறைந்த கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நூற்றாண்டையொட்டி, அடுத்த வாரம் நடைபெற உள்ள இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தின விழாவில் சிறப்பு தபால் தலை வெளியிட ஐ.நா.சபை முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் 70-ஆவது சுதந்திர தினம், வரும் 15-ஆம் தேதி ஐ.நா. சபையில் கொண்டாடப்பட உள்ளது. அதையொட்டி, ஐ.நா. சபையின் தூதர்கள், சர்வதேசத் தலைவர்கள் ஆகியோர் முன்னிலையில் ஆஸ்கார் விருது பெற்ற இந்திய இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சிறப்புக் கச்சேரி நடத்தவுள்ளார்.
மேலும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்த நூற்றாண்டு அடுத்த மாதம் 16-ஆம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டும், ஐ.நா.சபையில் அவர் கச்சேரி நடத்தி 50 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டும் வரும் 15-ஆம் தேதி முதல் 19-ஆம் தேதி வரை அவரது நினைவைப் போற்றும் புகைப்படக் கண்காட்சி நடத்தப்படும் என்றார்.