தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எம் தாய் மண்ணில் அடிமைகள் நாம்??

எம் தாய் மண்ணில்
அடிமைகள் நாம்
முதுகின் மீதேறி
இன்னொருவன் சுதந்திர சுடர்
ஏற்றுகிறான் பார்..!

தமிழா எரித்தாலும்
சாம்பலில் இருந்து
முளைப்பவன்
அல்லவா நீ!

வீழ்வது ஒரு நிகழ்வு
எழுவது தான் வரலாறு…!
இன்னொருவன் தருவதல்ல சுதந்திரம் .
நீயாய் பெற்றுக்கொள்!

புழுக்கள் என
எண்ணுபவர்க்கு
புலிகள் என காட்டு..!
உனக்குள்ளும்
சுதந்திரத் தீ மூட்டு.!

சிங்கக் கொடி சுறுட்டி
அடிமடியில் கட்டு!
செக்கச் சிவந்த கொடி
சீறும் சிறுத்தை கொடி
பறக்கவிடு சிரத்தின் மேல்.!
ஈழவன்

Comments
Loading...