Designed by Iniyas LTD
எல்லை தாண்டி மீன் பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் யாழில் கைது!
மன்னார் மற்றும் யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் எல்லை தாண்டிய மீன்பிடியில் ஈடுபட்ட தமிழக மீனவர்கள் 29 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
தமிழகத்தில் இருந்து ஐந்து படகுகளில் புறப்பட்ட 29 மீனவர்கள் மன்னார் , யாழ்ப்பாணம் கடற்பரப்பிற்குள் அத்துமீறிய குற்றச் நாட்டில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட 12பேரும் கடற்றொழில் நீரியல் வளத் திணைக்களப் பிரதிப் பணிப்பாளரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட 12பேரையும் மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆயர் செய்யப்பட்டனர்
இதே வேளை நேற்று முன்தினம் யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் இரு படகுகளில் அத்துமீறி உள்நுழைந்த 7 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு எதிர்வரும் 3 ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.