தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

எழுக தமிழில் திரண்டது ஈழம்!

14368762_10208707199612030_565903538458020845_n

எழுக தமிழ் நல்லூரில் இருந்து ஆரம்பம்

எழுக தமிழ் நிகழ்வு நல்லூரில் இருந்து ஆரம்பமாகியது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்ட இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.

இதேவேளை, யாழ் பல்கலைக்கழக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட மற்றையதொரு பேரணியும் யாழ் முற்றவெளி நோக்கி நகர்ந்தது. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணிக்கு ஆதரவு தெரிவித்து, யாழ். மாவட்ட வர்த்தகர்கள் தங்கள் கடைகளைப்பூட்டி ஆதரவு தெரிவித்துள்ளனர்.

வட மாகாணம் தழுவிய ரீதியில் ‘எழுக தமிழ்’ பேரணி இன்று (சனிக்கிழமை) யாழ். மாவட்டத்தில் இடம்பெற்றது. அதன் போது பேரணி ஏற்பாட்டாளர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய யாழ். மாவட்ட வர்த்தகர்கள் இன்று தங்கள் கடைகளைப் பூட்டி ஆதரவு தெரிவித்தனர்.

14470461_1076691339050548_436987811284364683_n

முற்றவெளியில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணியின் பிரகடனம் 

தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் ‘எழுக தமிழ்’ மக்கள் பேரணி இன்று (சனிக்கிழாமை) காலை 10.00 மணிக்கு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்தும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் முன்பாக இருந்தும் ஆரம்பிக்கப்பட்டு யாழ்.முற்றவெளியை சென்றடைந்து மாபெரும் பொதுக் கூட்டம் இடம்பெற்றது.

இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உரிமை கோசங்களை எழுப்பினர்கள்.

முற்றவெளியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் எழுக தமிழ் பிரகடனம் வெளியிடப்பட்டது. அத்துடன் வடமாகாண முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையின் முக்கிஸ்தர்கள் உரையாற்றினார்கள்.

Comments
Loading...