தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தாய்லாந்திற்கு செல்ல மைத்திரி தீர்மானம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தாய்லாந்து நாட்டுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.maithreepala

அதற்கமைய எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி தாய்லாந்து புறப்பட்டுச் செல்ல உள்ளார். தாய்லாந்தில் நடைபெறும் மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காவே ஜனாதிபதி அங்கு விஜயம் செய்ய உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது தாய்லாந்து அரசாங்கத்தின் தலைவர்களுடன் இருத்தரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

Comments
Loading...