Designed by Iniyas LTD
ஏப்ரல் 15 முதல் பொறியியல் பாடத்திற்கான விண்ணப்பங்கள்
2016ஆம் ஆண்டில் பொறியியல் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை ஏப்ரல் 15 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தாண்டு முதல் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமை செயலகத்தில் உயர்கல்வித் துறை செயலாளர் அபூர்வா தலைமையில் நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர், பதிவாளர், மாணவர் சேர்க்கை செயலாளர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர அண்ணாப் பல்கலைக்கழகம் மூலம் ஒற்றைச் சாளர முறையில் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொள்வதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்க வேண்டியது அவசியம்.