தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஏரியில் செத்துமிதக்கும் பெருந்தொகை மீன்கள்…

இலங்கை பூந்தல தேசிய பூங்காவிற்கு சொந்தமான ஏரியில் திடீரென ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்க்கப்பட்டுள்ளது.

மீன்கள் உயிரிழந்த நிலையில் ஏரியில்  மிதப்பதை பூங்கா  பொறுப்பாளர்  அவதானித்துள்ளார்.

இந்நிலையில் ஏரியில் ஆபத்தான பொருட்கள் எதுவும் கலக்கப்பட்டிருக்கலாம் என்றும், அதனால் மீன்கள்  இறந்திருக்கலாம் எனவும்  அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் நாரா நிறுவனத்திடம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை திடீரென ஆயிரக்கணக்காக மீன்கள் உயிரிழந்தமையினால், அதன் வாழ்வாதாரத்தை நம்பியுள்ள மீனவர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...