Designed by Iniyas LTD
கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ஜப்பான் யுத்தக் கப்பல்கள் …
ஜப்பான் யுத்தக் கப்பல்கள் இரண்டு சுற்றுலா விஜயமொன்றை மேற்கொண்டு கொழும்பு துறைமுகத்தில் நங்கூரம் இடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
ஜப்பானிலுள்ள சுய பாதுகாப்புக்கான கடற்படைக்குரிய “காகா” மற்றும் “இனசுமா” எனும் பெயரில் அழைக்கப்படுகின்ற குறித்த கொழும்பு துறைமுகத்தில் தரித்துள்ளன.
அதில் காகா கப்பலில் 400 பேர் கொண்ட குழு கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, குறித்த கப்பலைல் கண்காணிப்புப் பணியில் ஈடுபடக் கூடிய ஹெலிகொப்டர்கள் நான்கு காணப்படுகின்றதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஐந்து நாள் விஜயத்தை மேற்கொண்டு இலங்கை சென்றுள்ள இந்த கப்பல் பணியாளர்கள் இலங்கை கடற்படையினரின் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த கப்பல்கள் இரண்டும் ஒக்டோபர் 4 ஆம் திகதி நாட்டிலிருந்து புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை க்லுறிப்பிடத்தக்கது.