Designed by Iniyas LTD
ஏற்றத் தாழ்வை தவிர்ப்பதற்கே முன்னுரிமை’ – ஒபாமா
அமெரிக்க காங்கிரஸ் நாடாளுமன்றத்துக்கான தனது வருடாந்தர உரையில், அதிபர் ஒபாமா அவர்கள், வறியவர்களுக்கும் செல்வந்தர்களுக்கும் இடையிலான இடைவெளி அதிகரித்து வருவதை மாற்றுவதற்கான நடவடிக்கைகள் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை குறித்துப் பேசியுள்ளார்.
”ஒரு வருட நடவடிக்கைக்கான திட்டம்” குறித்து உறுதியளித்த அவர், அனைத்து அமெரிக்கர்களுக்கான வாய்ப்பில் சமநிலையை ஏற்படுத்தல் என்பதே தனது காலகட்ட திட்டமாக இருக்கும் என்று விவரித்துள்ளார்.
இதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்றத்தில் ஏற்பட்டிருக்கும் கருத்துப் பிளவையும் தாண்டி நடவடிக்கைகளை எடுப்பதற்கு தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது தொடர்பிலும் இது பொருந்தும் என்று அவர் கூறியுள்ளார்.
இரான் விடயத்தில் பேச்சுவார்த்தையை குலைக்கக்கூடிய எந்தவொரு தடைக்கு எதிராகவும், வீட்டோ வெட்டு வாக்கைப் பயன்படுத்துவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.