Designed by Iniyas LTD
காங்கிரஸ் 15வருடங்களின் பின் கோட்டையான டில்லியையும் இழந்து படுதோல்வி – ஷீலா ராஜினாமா? – ஆம்ஆத்மி எதிர்க்கட்சி ஆகிறது!
15வருடங்களின் பின் டில்லிஆட்சியை காங்கிரஸ் இழக்கிறது -ஷீலா ராஜினாமா -ஆம் ஆத்மி எதிர்க்கட்சி ஆகிறது:-
டெல்லியில் ஆட்சியை இழந்ததோடு, 10 தொகுதிகளில் கூட வெல்ல முடியாத நிலைக்கு காங்கிரஸ் போய் விட்டதால், டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
ஒட்டுமொத்தமாக முன்னிலையில் 3வது இடத்திற்கு ஏற்கனவே தள்ளப்பட்டு விட்டது காங்கிரஸ். பாஜக முதலிடத்தில் இருக்கிறது. 2வது இடத்தை கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி பிடித்துள்ளது. காங்கிரஸ் வட்டாரத்தை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஷீலா தீட்சித் ராஜினாமா.. அரவிந்த் கேஜ்ரிவாலிடம் தோற்கிறார் ஷீலா தீட்சித்தை எதிர்த்து புதுடெல்லி தொகுதியில் போட்டியிட்ட அரவிந்த் கேஜ்ரிவால் முன்னிலை வகித்து வருகிறார். ஷீலா தோல்விமுகத்தில் இருக்கிறார்.
கடந்த 15 வருடங்களாக காங்கிரஸ் வசம் இருந்து வந்த தலைநகர் தற்போது பாஜக வசம் போகிறது. காங்கிரஸுக்கு பெரும் தோல்வியைக் கொடுத்துள்ளது ஆம் ஆத்மி. தேர்தல் முடிவுகள் மிகவும் அதிர்ச்சிகரமாக இருப்பதால் காங்கிரஸ் வட்டாரம் அமைதியில் உறைந்துள்ளது. பெரும் தோல்விக்கு காங்கிரஸ் போய் விட்டதால் ஷீலா தீட்சித் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதுதொடர்பாக அவர் ஆளுநரிடம் கடிதம் கொடுத்துள்ளார்.
டெல்லி மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சியும் ஆட்சி அமைக்கக் கூடிய பெரும்பான்மையை எட்ட முடியாத நிலை உருவாகி உள்ளது. பரதிய ஜனதா கட்சி 31 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகிறது. டெல்லி சட்டசபை தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை இல்லை- இழுபறி டெல்லி மாநிலத்தில் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கம் முதலே பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகித்தது. ஆனால் ஆளும் காங்கிரஸுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் வகையில் அர்விந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி 2வது இடத்தை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சியால் 10 தொகுதிகளில் கூட முன்னிலையை எட்ட முடியவில்லை. ஒரு கட்டத்தில் மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கக் கூடிய வகையில் முன்னிலையை எட்ட இருந்தது பாஜக. ஆனால் பின்னர் நிலைமை மாறியது. பாரதிய ஜனதா கட்சி 31 இடங்களிலும் ஆம் ஆத்மி கட்சி 24 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் கட்சியோ 8 இடங்களில்தான் முன்னிலை வகிக்கிறது.