தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐஎஸ்எல் கால்பந்து இறுதி தொடரில் கோவா, சென்னை அணி மோதல்

ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் கோவா, சென்னை அணிகளுக்கிடையிலான இறுதிப் போட்டி மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் ஃபடோர்டா மைதானத்தில் இன்று நடைபெற உள்ளது. இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு கடந்த இரண்டு மாத காலமாக விருந்து படைத்த ஐஎஸ்எல் கால்பந்து தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.chen-vs-goa

2-வது சீசனின் தொடக்க விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது  ரசிகர்களுக்கு கண்கவர் நிகழ்ச்சியாக அமைந்தது. 8 அணிகள் பங்கேற்று, இந்தியாவின் 8 நகரங்களில் களைகட்டிய இந்த தொடர் கால்பந்து ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்தது. இதில் கோவா, சென்னை அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன.  முன்னதாக, அரையிறுதி ஆட்டங்களில் டெல்லி அணியை கோவா அணியும், நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணியை சென்னை அணியும், கோல் விகிதாச்சார அடிப்படையில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இரு அணிகளுக்கும் இடையிலான இறுதிப் போட்டி கோவா-வில் நடைபெற உள்ளது.  இந்த சீசனில் இரு அணிகளும் லீக் ஆட்டங்களில் மோதியுள்ளதில் சென்னை மண்ணில் கோவா அணியும், கோவா மண்ணில் சென்னை அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்த இறுதிப் போட்டி சொந்த அணியான கோவா அணிக்கு சாதகமா அல்லது சென்னை அணிக்கு சாதகமா என்பது யாரும் கணிக்க முடியாத வகையில் உள்ளது. கோவா அணி சொந்த மண்ணில் களமிறங்குவதால் அந்த அணிக்கு உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு அதிகம் இருக்கும்.

அதே சமயம் கால்பந்து ரசிகர்களை ஏராளமாகக் கொண்ட கோவாவில், சென்னை அணிக்கும் போதுமான ஆதரவு கிடைக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த பலப்பரீட்சையின் முடிவில் இரண்டாவது சீசன் கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்ற எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Comments
Loading...