தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிர்பயா வழக்கில் தண்டிக்கப்பட்ட இளம் குற்றவாளி விடுதலை!

nirbayaநிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டிக்கப்பட்ட இளம் குற்றவாளி இன்று விடுதலை செய்யப்பட்டார்.

தில்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை காம கொடூர கும்பல் ஒன்று, கடந்த 2012-ஆம் ஆண்டில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து, அந்த மாணவியை கொடூரமான முறையில் கொன்றது.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் 6 பேரில் ஒருவர் திகார் சிறையில் உயிரிழந்த நிலையில் சிறார் குற்றவாளிக்கு 3 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்பட்டார். மற்ற நான்கு பேரும் தூக்கிலிடப்பட்டனர். இதனால் அந்தக் குற்றவாளி திட்டமிட்டபடி விடுதலை ஆகின்றார். இவரது விடுதலைக்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பினாலும், சட்டத்தின்படியே அனைத்தும் நடந்திருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்து விட்டது.

இதையடுத்து சிறார் குற்றவாளியின் விடுதலையை எதிர்த்து மனு ஒன்றை தயார் செய்துள்ள தில்லி மகளிர் ஆணையம், உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. இந்நிலையில், தில்லி மாணவி பலாத்கார வழக்கில் தண்டனை முடிந்து இன்று விடுதலை செய்யப்பட்டார் இளம் குற்றவாளி. அவர் டெய்லராக புதிய வாழ்க்கையை தொடங்குவதற்கு வசதியாக ரூ.10 ஆயிரம் வழங்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இவர் தொடர்ந்து தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் கண்காணிப்பில் இளைஞர் பாரமரிக்கப்படுவார் எனத் தகவல் தெரிவிக்கின்றன. இதைத் தொடர்ந்து, இளம் குற்றவாளி விடுதலையை எதிர்த்து பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆதரவாளர்கள் பலர் தில்லியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இந்தியா கேட் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Comments
Loading...