தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஐந்து ஒரு நாள் போட்டியில் இந்தியா – நியூசுலாந்து அணி மோதல்

மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இம்மாத இறுதியில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள, நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இப்பயணத்தில் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஐந்து ஒரு நாள் போட்டிகளில் விளையாடவுள்ள 15 வீரர்கள் கொண்ட அணி இன்று அறிவிக்கப்பட்டது.  india - new

கடந்த மாதம் தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம்  மேற்கொண்ட அணியிலிருந்து மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தொடக்க ஆட்டக்காரர் ஜீட்  ராவல் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மாட் ஹென்றி ஆகிய  இருவரும் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.முதுகு வலி காரணமாக கடந்த நவம்பர் மாதம் முதல் அணியில் இடம்பெறாமல் இருந்த ஆல்  ரவுண்டர் ஜிம்மி நீஷம் மீண்டும் அணிக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

அதே போல் தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தின் போது அவ்வளவாக சோபிக்காத துவக்க ஆட்டக்காரர் மார்ட்டின் குப்தில் அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார். அணி அறிவிப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தேர்வாளர் கேவின் லார்சென், ‘இதுவரை இந்தியாவில் டெஸ்ட் போட்டித் தொடரை நியூசிலாந்து வென்றதில்லை என்ற வரலாற்றை மாற்றப்  போராடுவோம்’ என்று தெரிவித்தார்.

Comments
Loading...