Designed by Iniyas LTD
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதி தடை நீக்கம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்ரீலங்கா மீதான மீன் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மீன் ஏற்றுமதிக்கான தடைவிதிக்கப்படுவதற்கு முன்னர் கொள்ளளவு அடிப்படையில் ஸ்ரீலங்கா மீன் ஏற்றுமதியின் சுமார் மூன்றில் ஒரு பங்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்கானதாக காணப்பட்டது.
அத்தோடு, மொத்த மீன் ஏற்றுமதி வருமான அடிப்படையில் 40 சதவீத வருமானம் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஊடாக கிடைத்தது.
இந்நிலையில் சட்டவிரோத மற்றும் ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடியில் ஸ்ரீலங்கா ஈடுபட்டதன் அடிப்படையிலேயே இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்களை அடிப்படையாக கொண்டு அதற்கான ஐரோப்பிய ஒன்றியத்திற்கான மீன்பிடி தடை நீக்கப்படவில்லை.
இந்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் கடந்த 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்றதன் பின்னர் சர்வதேச நாடுகளுடன் பேணி வரும் உறவு மற்றும் நல்லிணக்க முயற்சியின் பலனாக கடந்த ஏப்ரல் மாதம் மீன் ஏற்றுமதிக்கான தடையை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தியிருந்தது.
இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் ஸ்ரீலங்கா மீது விதித்திருந்த மீன் ஏற்றுமதி தடை முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.