Designed by Iniyas LTD
ஐரோப்பிய நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் – பிரிட்டன் ராணி
அரசு முறைப்பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரிட்டன் மகாராணி ஐரோப்பிய நாடுகள் எப்போதும் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
ஜெர்மனி அதிபர் மாளிகையில் நடைபெற்ற விழாவில் உரையாற்றிய அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பியக் கண்டத்தில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் குறித்து குறிப்பிட்ட மகாராணி, போருக்கு பிந்தைய உலகத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி தரும் மாற்றங்களை பயன்படுத்தி முன்னேற்றம் காண வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய ஜெர்மனி அதிபர் ஜோச்சிம் குவாக் (JOACHIM GAUCK) ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் தொடரத் தேவையான நடவடிக்கைகளுக்கு ஜெர்மனி துணை நிற்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.