Designed by Iniyas LTD
ஐ.நா. சபையின் புதிய பொதுச்செயலாளர் அன்டோனியோ கட்டெரெஸ்
ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான்கிமூன் உள்ளார். இவரது பதவிக்காலம் இந்தாண்டு இறுதியில் முடிவடைகிறது. ஐ.நா.வின் அடுத்த பொதுச் செயலாளரை தேர்ந்தெடுப்பதற்கான வேலைகள் நடைபெற்று வந்தன.
இந்நிலையில், ஐ.நா. சபையின் அடுத்த பொதுச் செயலாளராக போர்ச்சுகீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ கட்டெரெஸை தேர்வு செய்ய பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் குட்டெரெஸை தேர்வு செய்ய ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளது.
அன்டோனியோ கட்டெரெஸ் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார், அதில் சிலவற்றை காண்போம்: இவர் 1949ம் ஆண்டு ஏப்ரல் 30ம் தேதி போர்ச்சுகல், லிஸ்பனில் பிறந்தவர் ஆவார். 66 வயதான இவருக்கு கத்திரினா வாஸ் பின்டோ என்ற மனைவி இருக்கிறார்.
முதன் முதலாக 1974ம் ஆண்டு சோஷலிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் பணி புரிந்துள்ளார். 1995ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சோஷலிஸ்ட் கட்சி வெற்றி பெற்றதை அடுத்து போர்ச்சுகீசிய நாட்டின் 114வது பிரதமராக பொறுப்பேற்றுக்கொண்டார்.
இவர், ஐரோப்பிய கவுன்சிலின் தலைமைப் பொறுப்பு, மற்றும் ஐ.நா. சபையின் அகதிகள் நல ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.