Designed by Iniyas LTD
ஒட்டிசுட்டானில் காணிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கி வைப்பு!
முல்லை மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுக்குட்ப்பட்ட குடும்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.இதன்போது, பனிக்கன்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்ப்பட்ட 43 பேருக்கு தலா 01 ஏக்கர் மேட்டுக்காணிக்கான அனுமதிப் பத்திரமும் 29 பேருக்கு தலா அரை ஏக்கர் காணிக்கான அனுமதிப் பத்திரமும் 02 பேருக்கு தலா 01 ஏக்கர் வயல் காணிக்கான அனுமதிப் பத்திரமுமாக மொத்தம் 72 குடும்பங்களுக்கான அனுமதிப்பத்திரங்கள் இன்று வழங்கி வைக்கப்பட்டது.
இதேவேளை அடுத்த கட்டத்தில் அனுமதிப்பத்திரம் வழங்கவுள்ளவர்களுக்கான காணிக் கச்சேரியும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் மற்றும் பனிக்கன்குளம் கிராம அலுவலர் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.