Designed by Iniyas LTD
காணாமல் போன மாணவன் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!
வவுனியாவில் மூன்றுமுறிப்பு பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதேவேளை மகனை காணவில்லை என தாயார் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
மகிது நுன்தர எனும் எட்டு வயது சிறுவனே வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வீட்டின் அருகில் உள்ள கிணற்றில் இருந்து நேற்றிரவு மாணவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலை வைக்கப்பட்டுள்ளது.