தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஒட்டுசுட்டானில் வெடிபொருள் விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட 12 பேரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது..

கடந்த ஜூன் மாதம் ஒட்டுசுட்டான் பகுதியில் புலிக்கொடி மற்றும் வெடிபொருட்களுடன் சென்ற முச்சக்கரவண்டி சாரதி உள்ளிட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டுவந்தனர்.
சம்பவம் தொடர்பில்  பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப்பிரிவினர்   முற்கட்டமாக 09 பேரை கைதுசெய்து விசாரித்துவந்துள்ளார்கள்.
இது தொடர்பில் கடந்த மாதமும் துணுக்காய்,கிளிநொச்சிபகுதியினை சேர்ந்த இருவர் இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தவேளை மேலும் ஒருவர் கடந்த மாதம் 29.08.18 அன்று நீதிமன்றில் சரணடைந்துள்ளார்
இந்த நிலையில் குறித்த வழக்கு  நேற்றையதினம் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் ந.சுதர்சன் முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது சந்தேக நபர்கள்  12 பேரையம் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Comments
Loading...