தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

விடுதலைப்புலிகளின் தங்கம் தேடி, அகழ்வில் ஈடுபட்ட 7 பேர் கைது

விடுதலைப்புலிகள் இறுதி யுத்தகாலத்தில் இருந்த புதுக்குடியிருப்பு ஆனந்தபுரம்  பகுதியில் உள்ள லோரன்ஸ் ராஜா என்பவரது காணியில் விடுதைப்புளிகளால் புதைக்கப்பட்ட தங்கம் இருப்பதாக தெரிவித்து வெளி மாவட்டங்களை சேர்ந்த பலர் இணைந்து அகழ்வில் ஈடுபடுவதாக புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது

இதனடிப்படையில் புதுக்குடியிருப்பு போலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம் டி சரத் சந்திரபால அவர்களது வழிகாட்டலில் உப பொலிஸ் பரிசோதகர் அல்விஸ் போலிஸ் அதிகாரிகளான கமகே(48759) சம்பத்(19136) விஜயகாந்த்(7230) முத்துனாஜக்க(60600) உள்ளிட்ட அணியினர் குறித்த வீட்டின் பின்புறமாக உள்ள காட்டில் இருந்து கடந்த 7 நாட்களாக இவர்களது நடவடிக்கைகளை அவதானித்துள்ளனர்.

இந்த நிலையில் இன்று குறித்த இடத்தை தோண்டும் நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டபோது  குறித்த 7 பேரும் கைது செய்யப்பட்டனர்

விடுதலைப்புலிகள் புதைத்த நகைகள் ஒரு பெட்டியில் இந்த இடத்தில் இருப்பதாக தெரிவித்தே இந்த அகழ்வில் ஈடுபட்டதாக குறித்த நபர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நபர்கள் மாத்தறை சிலாபம் மன்னார் மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியினை சேர்ந்தவர்கள் எனவும் சிங்கள தமிழ் முஸ்லிம் ஆகிய மூன்று இனத்தவர்களும் உள்ளதாகவும் புதுக்குடியிருப்பு போலீசார் கூறியுள்ளனர்.

சம்பவம் ஹொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவரும் புதுக்குடியிருப்பு  போலீசார் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துவருவதாக மேலும்  தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...